ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் மிட்டாய் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2022 02:01
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பாதையாத்திரை பக்தர்கள் மிட்டாய் வைத்து வழிபாடு நடத்தினர். ஆண்டுதோறும் பழநிக்கு செல்லும் பாதை யாத்திரை பக்தர்கள் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் குழந்தை வடிவில் காட்சியளிக்கும் முருகனை வழிபட்டுச் செல்வர்.
தாங்கள் வேண்டிக்கொண்ட பிரார்த்தனைகள் நிறைவேற்ற வேண்டி இங்கு உள்ள மரத்தில் மிட்டாய் வைத்து வழிபடுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் மறுபடியும் பாதயாத்திரை செல்லும்போது கோயிலில் மிட்டாய் வைத்து வழிபடுவது உண்டு. இங்குள்ள குழந்தை வேலப்பரை மனம் உருகி வேண்டி முறையிட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு. இதன் காரணமாக பழநி வழியாக பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் இங்கு மிட்டாய் மற்றும் இனிப்புகள் வைத்து வழிபடுகின்றனர்.