உலகளாவிய சூரிய நமஸ்காரம் ஒரு கோடி மக்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜன 2022 06:01
புதுடில்லி: உலகம் முழுதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் நேற்று சூரிய நமஸ்காரம் நிகழ்வில் பங்கேற்றதாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சியை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனவால் ஆன்லைன் வாயிலாக நேற்று துவக்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின் அடிப்படையில் மனித குலத்தின் ஆரோக்கியத்திற்காக யோகா மற்றும் சூரிய நமஸ்காரம் செய்யப்படுவதுடன், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இது மிகச்சிறந்த வழி, என, அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில்,கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில், உலக அளவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.