லலிதா சகஸ்ர நாமத்தில் அம்பாளுக்கு கோமாதா என்று பெயர் வழங்கப்படுகிறது. சில கோயில்களில் பராசக்தியே பசு வடிவில் வந்ததாக கூறப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் அம்பாளின் பெயரே கோமதி அல்லது ஆவுடை என உள்ளது. கோ என்றாலும், ஆ என்றாலும் பசு என்று பொருள்படும் அம்பிகையின் சகோதரரான மகாவிஷ்ணு பூலோகத்திற்கு வந்து பசு வடிவில் இருந்த தங்கையைப்பாதுகாத்து சிவனுக்கு திருமணம் செய்து வைத்ததாக சொல்வர்.