திருப்பரங்குன்றம் கோயில் நடை திறப்பு நேரம் மாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2022 04:01
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தில் நடைதிறப்பு நேரங்களில் செய்யப்பட்டிருந்த மாற்றம் ஜன.19 முதல் மீண்டும் வழக்கமான நேரங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மார்கழி மாதம் முடிந்தாலும் கொரோனா தடை உத்தரவால் ஜன.14 முதல் ஜன.18 வரை கோயிலில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜன.19 முதல் மீண்டும் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஜன.19 முதல் காலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1:00 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9:15 மணிக்கு நடை சாத்தப்படும் என கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) கலைவாணன் தெரிவித்தார்.