பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே உருமாண்டாம்பாளையம் ஜீவா வீதியில் இருந்து தைப்பூச காவடி குழு பாதயாத்திரை பழனி நோக்கி புறப்பட்டுச் சென்றது. இங்குள்ள பட்டத்தரசி அம்மன், மாகாளியம்மன் கோவில், கருப்பராயன் கோவில், விநாயகர் கோவில் ஆகிய இடங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வண்டியில் முருகர், திரு உருவத்துடன் பழனியை நோக்கி காவடி யாத்திரை கிளம்பி சென்றது. முன்னதாக முருகருக்கு அபிஷேக ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.