புதுச்சேரி : முதலியார்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் 73வது தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று நடந்தது.காலை 6.௦௦ மணிக்கு அகவல் பாராயணம் நடந்தது. 8.௦௦ மணிக்கு, ஏழு திரைகள் நீக்கி அருட்பெரும் ஜோதி தரிசன வழிபாடு நடந்தது. ஜோதி தரிசன நிகழ்ச்சியை பிரதிபா வர்ணனை செய்தார். சிறப்பு சொற்பொழிவு, யோகாசனம், பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.