பாகூர் : சோரியாங்குப்பம் ஆற்றுத் திருவிழா மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது.பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில், பொங்கல் பண்டிகையின் 5வது நாளில் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.கடந்த ஆண்டு புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக ஆற்றுத் திருவிழாவிற்கு தடை விதிக்கப் பட்டது. இந்த ஆண்டு ஆற்றுத் திருவிழா குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது.இந்நிலையில், நதி தீர்த்தவாரி நாளான நேற்று சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில், பாகூர் லட்சுமி நாராயண பெருமாள் சுவாமி உள்ளிட்ட ஒரு சில சுவாமிகளே எழுந்தருளினர்.திருவிழா குறித்த அறிவிப்பு இல்லாததாலும், கொரோனா பரவல் காரணமாகவும் பொது மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடியது. இதனால் கடை போட்டிருந்த ஒரு சில வியாபாரிகளும் காலி செய்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.