புதுச்சேரி : பிருந்தாவனம் கதிர்வேல் சுவாமிகள் மணிமண்டபத்தில் குருபூஜை மற்றும் தைப்பூச விழா நடந்தது.புதுச்சேரி பிருந்தாவனம் மூன்றாவது குறுக்கு தெருவில், யாழ்ப்பாணம் கதிர்வேல் சுவாமிகள் மணிமண்டபம் அமைந்துள்ளது. இங்கு, கதிர்வேல் சுவாமிகளின் 117ம் ஆண்டு மகாசமாதி தின பூஜை மற்றும் தைப்பூச விழா நேற்று நடந்தது.மாலை 4:00 மணிக்கு கதிர்வேல் சுவாமிக்கு மகா அபிஷேகம், விஷேச பூஜைகள் நடந்தது. 6:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் செயலாளர் உதயசங்கர், செயல் தலைவர் ராமமூர்த்தி மற்றும் சித்தர் மடம் குழுவினர் செய்தனர்.