திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2022 02:01
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் பூச திருவிழா ப்ப உற்சவம் நேற்று இரவு வெளித்தெப்பத்தில் நடந்தது. நெல்லையப்பர் கோயில் பூச திருவிழா கடந்த 9ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
12ம் தேதி நெல்லுக்கு வேலியிட்ட வைபவம், 18ம் தேதி கோயில் பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி, 19ம் தேதி சவுந்தர சபையில் திருநடனக்காட்சி நடந்தது. விழாவின் 12ம் நாளான நேற்று மதியம் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் தெப்பக்குளம் அருகில் உள்ள மீனாட்சி, சுந்தரேஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர். அங்குள்ள மண்டபத்தில் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் ளித்தெப்பத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க நீராழி மண்டபத்தை 11முறை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சிவனடியார்கள் தங்களை பாராயணம் தோடு, பாடல்கள் பாடினர். இதில் கோயில் செயல் அலுவலர் ராமராஜா, பேஸ்கர் முருகேசன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். தெப்ப உற்சவத்தை முன்னிட்டு வெளித்தெப்பம் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.