Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆண்டவர் கோயிலில் ... வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்: நேரடி ஒளிபரப்பு வடபழநி ஆண்டவர் கோவில் ...
முதல் பக்கம் » வடபழனி கும்பாபிஷேகம் » செய்திகள்
வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேம்: ராஜகோபுரத்தில் தங்கக் கலசங்கள் பொருத்தப்பட்டன
எழுத்தின் அளவு:
வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேம்: ராஜகோபுரத்தில் தங்கக் கலசங்கள் பொருத்தப்பட்டன

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
10:01

சென்னை: வடபழநி ஆண்டவர்கோவில் கும்பாபிஷேத்தை முன்னிட்டு, அஷ்டபந்தன மருந்து இடித்து, சன்னிதிகளின் ஆதார பீடத்தில் சார்த்தல், ராஜகோபுர கலசங்கள் பொருத்தும் பணி நேற்று சிறப்பாக நடைபெற்றது.

சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில், 2007ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 14 ஆண்டுகளுக்குப் பின், நாளை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.108 ஹோம குண்டங்கள் கும்பாபிஷேகத்திற்கான ஆயத்த பூஜைகள், 17ம் தேதி முதல் நடந்து வரும் நிலையில், யாகசாலை பிரவேசம் நேற்று முன்தினம் நடந்தது. யாகசாலையில் முருகப் பெருமானுக்கு 33 ஹோம குண்டங்கள், பரிவார தெய்வங்களுக்கு 75 ஹோம குண்டங்கள் என 108 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 1,300 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. யாகசாலை பூஜைகளை, பிள்ளையார்பட்டி சர்வசாதகம் பிச்சை குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நிகழ்த்தி வருகின்றனர்.

கோவில்களில், 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடக்கும்போது, சன்னிதிகளில் பீடத்தின் கீழ் யந்திரம் வைத்து, மூலவர் பிரதிஷ்டை நடக்கிறது. அதை பாதுகாப்பதற்காக அஷ்டபந்தன மருந்து சார்த்தப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை அஷ்டபந்தன மருந்து இடிக்கும் வைபவம், பிள்ளையார்பட்டி சர்வசாதகம் பிச்சை குருக்கள், மதுரை, திருப்பரங்குன்றம், ஸ்ரீஸ்கந்தகுரு முதல்வர் சிவஸ்ரீ ராஜா பட்டர் ஆகியோர் தலைமையில் நடந்தது. சுக்கான் துாள் எனும் பச்சை சுண்ணாம்புக்கல்,கற்காவி, கருங்குங்கிலியம், கொம்பரக்கு, உலாந்தா லிங்கம் எனும் ஜாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருட்கள் சேர்த்து இடித்து, அஷ்டபந்தன கலவை மருந்து தயாரித்து சன்னதிகளின் பீடத்தில் சார்த்தப்பட்டது. பின், யாகசாலை பூஜைகளில் பங்கேற்று வரும் சிவாச்சாரியார்கள் அனைவருக்கும், கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் வஸ்திரங்களை வழங்கி மரியாதை செய்தார்.

ஏழு தங்கக் கலசங்கள்: நேற்று பகல் 12:00 மணிக்கு மகா பூர்ணாஹுதி, தீபாராதனையும், மாலை 5:30 மணிக்கு விசேஷ சந்தி, மூன்றாம் கால யாக பூஜை, ஜபம் ஹோமமும் நடந்தன.அதைத் தொடர்ந்து, தங்க முலாம் பூசப்பட்ட ஏழு தங்கக் கலசங்கள் ராஜகோபுரத்தில் பொருத்தப்பட்டன. இரவு 8:30 மணிக்கு மகா பூர்ணாஹுதி நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் வடபழநி ஆண்டவர் கோவில் இணை கமிஷனர் ரேணுகா தேவி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்றிரவு நடந்த யாகசாலை பூஜையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.

 
மேலும் வடபழனி கும்பாபிஷேகம் செய்திகள் »
temple news
சென்னை: சென்னை வடபழநி ஆண்டவர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை அடுத்து, தொடர்ந்து 48 நாட்கள் ... மேலும்
 
temple news
சென்னை: வட பழநி ஆண்டவரை தரிசிக்க இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சென்னை வடபழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருகல்யாண வைபவம் நடந்தது.வடபழநி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின் பிரமாண்ட திருப்பணிகள் முடிந்த நிலையில், அனைத்து ... மேலும்
 
temple news
சென்னையில் வடபழநி ஷேத்ரத்தில் அமைந்துள்ளது வடபழநி ஆண்டவர் கோவில். இக்கோவிலுக்கு, 2007ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar