ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் மார்கழி உற்ஸவங்கள் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2022 03:01
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாத உற்சவங்களான பகல்பத்து, வைகுண்ட ஏகாதசி, எண்ணெய் காப்பு உற்ஸவம், ராப்பத்து உற்ஸங்கள் நிறைவு பெற்றது.
கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 வரை பகல் பத்து உற்ஸவம், ஜனவரி 13 அன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பும், ஜனவரி 7 முதல் 14 வரை எண்ணை காப்பு உற்ஸவம், ஜனவரி 13 முதல் நேற்று வரை இராப்பத்து உற்ஸவங்களும் நடந்தது. நேற்று கூரத்தாழ்வார் திருநட்சத்திர அவதார உற்ஸவம் சிறப்பாக நடந்தது. இதனை முன்னிட்டு கூரத்தாழ்வாருக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆண்டாள், பெரியபெருமாள் மங்களாசாசனம் நடந்தது. வருடந்தோறும் வெகு விமர்சையாக நடக்கும் மார்கழி மாத உற்ஸவங்கள் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களின்றி நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோவில் பட்டர்கள் செய்திருந்தனர்.