திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயிலில் 10 நாட்களில் 26 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன. 13ம் தேதி முதல் 22ம் தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு சொர்க்கவாசல் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.அதில் 3.79 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இந்த நாட்களில் உண்டியல் காணிக்கையாக 26.61 கோடி ரூபாய் கிடைத்தது.இந்த 10 நாட்களில் 69 ஆயிரத்து 117 வாகனங்கள் திருமலைக்கு வந்தன; 42 ஆயிரத்து 809 தங்கும் அறைகள் பக்தர்களால் முன்பதிவு செய்யப்பட்டன. 1.23 லட்சம் பக்தர்கள் தங்கள் தலை முடியை காணிக்கையாக செலுத்தினர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.