நத்தம்: நத்தம் வேலம்பட்டி கிராமம் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அரண்மனை சந்தன கருப்பண்ணசாமி கோவில் திருவிழா சாமி ஊர்வலத்துடன் நடந்தது.
நத்தம் வேலம்பட்டி கிராமம் மீனாட்சிபுரம்- எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அரண்மனை சந்தன கருப்பண்ண சுவாமி கோவில் திருவிழா நடந்தது. கடந்த மாதம் 12ஆம் தேதி பிடிமண் கொடுத்தலுடன் திருவிழா தொடங்கியது. பின்னர் கொடியேற்றம், தோரண மரம் ஊண்டுதல் விழா நடந்தது. தொடர்ந்து அம்மன் குளத்தில் இருந்து சுவாமிக்கு கண் திறக்கப்பட்டு சுவாமி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க, ஒயிலாட்டம் மற்றும் தேவராட்டத்துடன் நகர்வலம் வந்தது. பின் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாளை ஜன 25, அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடாய் வெட்டுதல், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கும். ஜன 26, மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. முன்னதாக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் வேலம்பட்டி, எம்.ஜிஆர் நகர், மீனாட்சிபுரம் பகுதி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.