கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2022 10:01
நாகர்கோவில்: கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் மூன்றாவது வருஷாபிஷேக விழா நடைபெற்றது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் 51.5 ஏக்கர் நிலப்பரப்பில் 22 கோடி ரூபாய் செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டப்பட்டு 2019 ஜன.,27–ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாதசேவை, 9:00 மணிக்கு புண்ணியாகவாசனமும், அஸ்தோத்ரா பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து 108 கலசங்களில் புனிதநீர் நிறைக்கப்பட்டு கலச பூஜை நடைபெற்றது. பின்னர் வெங்கடாஜலபதி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி விக்ரகங்களில் திருமஞ்சனம் சார்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12:00 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.