ராமநாதபுரம் : ஸ்ரீதாயுமானசுவாமி தை மாதம் விசாக நட்சத்திரத்தன்று ஸித்தி அடைந்தார். இந்நாளை முன்னிட்டு நேற்று ராமநாதபுரம் வெளிப்பட்டணம் தாயுமானசுவாமி தபோவனத்தில் குருபூஜை விழா நடந்தது. காலையில் திருப்பள்ளியெழுச்சி, சிவநாமஜபம், ஸ்படிக லிங்கம் மூலம் சுவாமிக்கு அபிேஷகம் செய்தனர். மலர்களால் அலங்காரம் செய்து மகேஸ்வர பூஜையில் தீபாராதனை நடந்தது. பக்தி பஜனைகள், அன்னதானம் வழங்கப்பட்டது. மடத்தின் பொறுப்பாளர் ருத்ரானந்தர், செயலாளர் சத்யனாந்தர், தபோவனம் துறவிகள், சிவனடியார்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.