ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற வைணவத் திருப்பதிகளில் ஒன்றான கள்ள பிரான் கோயிலில், மூலவர்அவதாரதினத்தை முன்னிட்டு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு விஸ்வரூபம், காலை 9:00 மணிக்கு மூலவர் சுவாமி வைகுண்டநாதனுக்கு பால் திருமஞ்சனம் தீபாராதனை நடைபெற்றது. காலை 11:00 மணிக்கு சுவாமி கள்ளபிரான், ஸ்ரீதேவி பூதேவியுடன் தங்கமசகிரி மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் சிறப்பு திருமஞ்சனம், நாலாயிர திவ்ய பிரபந்த சேவை கோஷ்டி நடந்தது . சுவாமி கள்ளபிரான் பல்லக்கில் எழுந்தருளி புறப்பாடு நடந்தது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி கோகுல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, ஸ்தலதார்கள் சீனிவாசன் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன் உட்பட உபயதாரர் வக்கீல் சந்திரசேகரன், தேவராஜன். அர்ச்சகர்கள் ரமேஷ்நாராயணன், ராமானுஜம், சீனு ஆகியோர் கலந்து கொண்டனர்.