பழநி கோயிலுக்கு மாட்டு வண்டியில் வந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2022 09:02
பழநி: பழநி மலைக்கோயிலுக்கு திருப்பூர் மாவட்டம், பெதப்பம் பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் மாட்டு வண்டியில் வந்து தரிசனம் செய்தனர்.
பழநி மலைக்கோயிலுக்கு திருப்பூர் மாவட்டம் பெதப்பம்பட்டி, சோமாரபட்டியை சேர்ந்த பக்தர்கள் நேற்று தரிசனத்திற்கு வருகை புரிந்தனர். கடந்தந 52 ஆண்டுகளாக தைப்பூசத்தை ஒட்டி பழநிமுருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை புரிகின்றனர். இந்த ஆண்டு 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பாதயாத்திரையாகவும், மாட்டு வண்டிகளிலும் வந்தனர். தீர்த்தக் காவடிகள், மயில் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து வருகை புரிந்தனர். இதில் 30க்கும் மேற்பட்ட ரேக்ளா மற்றும் மாட்டு வண்டிகளில் துங்காவி, கணியூர், கடத்தூர், மடத்துக்குளம், வயலூர் சண்முக நதி வழியாக பழநி வந்து அடைந்தனர். நேற்று மலைக்கோயில் சென்று தரிசனம் செய்து நேர்த்திக்கடன் முடித்த பின் கிளம்பி சொந்த ஊருக்கு மாட்டு வண்டிகளில் வரிசையாக திரும்பிச் சென்றனர்.