எதிர்பார்ப்பு ஏதுமின்றி கடவுள் தன் நிலையிலிருந்து விண்ணில் இருந்து மண்ணிற்கு இறங்குவது ‘சவுசீலம்’. ராமர் தன் அவதார காலத்தில் மனிதர்களோடு மட்டுமில்லாமல், வேடர், குரங்கு, பறவை என அனைத்து உயிர்களுடன் நெருங்கி பழகினார். வேலைக்காரன் போல பக்தர்கள் ஏவிய பணியைக் கூட செய்தவர் துவாரகையின் மன்னரான கிருஷ்ணர். ஆயர்பாடியில் பசுக்களை மேய்த்து, குசேலருக்கு பணிவிடை செய்து, பாண்டவர்களுக்காக துாது சென்று, போர்க்களத்தில் அர்ஜூனனின் தேர் சாரதியாக கூட செயல்பட்டார். ஆய்ப்பாடி சிறுவர்கள் அவரது பாலலீலைகளையும், மாயாஜாலங்களையும் கண்டு பயந்த போது, ‘‘என்னைக் கண்டு அஞ்சாதீர்கள். உங்களில் நானும் ஒருவனே’’என்று சொல்லி நட்பு பாராட்டியதும் சவுசீல குணத்தால் தான்.