பதிவு செய்த நாள்
05
பிப்
2022
10:02
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி யில் மாசித் திருவிழா, வரும் 7ம் தி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, விழா முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் தில்ராஜ் ஆய்வு கொண்டார்.
கோயில் வளாகம், கடற்கரை, நாழிக்கிணறு பஸ் ண்ட், திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கும் மண்டபங்கள், ர் ட்டம் நடக்க கூடிய தவீதி சாலைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர், கலெக்டர் தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா, வரும் 7ம் தி துவங்கி 18ம் தேதி வரை 12நாட்கள் வெகு விமர்சையாக நடக்கிறது. திருவிழாவிற்கு வேண்டிய முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. நேற்று மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. துறைரீதியாக செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள், பணிகள் குறித்து, அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோயிலில் இந்துசமய அறநிலை துறை அமைச்சர், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்ஆகியோருடன் நேரில் ஆய்வு செய்தோம். பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு சதியாக ஒரே நேரத்தில் 100 நபர்கள் அமரக்கூடிய காத்திருப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் வழக்கம்போல், நடந்த அ னுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேரோட்டம், சிவப்பு சாத்தி , வெள்ளை சாத்தி, உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பக்தர்களும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார் .