தர்மராஜா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2022 08:02
மயிலாடுதுறை: தர்மராஜா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்தில் தர்மராஜா மாரியம்மன் கோவில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 26ம் தேதி கொடி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை காளியம்மன் கோவிலில் இருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து மாரியம்மனுக்கு அபிஷேகங்கள் செய்தும் மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர் தொடர்ந்து இன்று மாலை பொறை வாய்க்காலில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் மற்றும் அலகு காவடிகள் மேல மங்கள வாத்தியம் மற்றும் பம்பை இசை முழங்க வந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட தீ குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று இரவு மாரியம்மன் வீதிஉலா நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.