பதிவு செய்த நாள்
12
ஜூலை
2012
11:07
தர்மபுரி: தர்மபுரி அடுத்த அதியமான் கோட்டை ஸ்ரீதட்சண காசி கால பைரவர் கோவிலில், அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரையில் அஸ்ட பைரவர் சிறப்பு ஹோமம், சிறப்பு அபிஷேகம், ஆயிரத்து எட்டு அர்ச்சனைகள் சிறப்பு பூஜை, 64 வகையான அபிஷேகங்கள், 12 ராசிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அஷ்ட லட்சுமி ஹோமம், அதிருத்ர யாகம், உபஜார பூஜைகமும், இரவு 10.30 மணிக்கு மேல் சத்ரு சம்ஹார குறிஞ்சி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதியில் இருந்தும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, வெள்ளை பூசணியில் தீபம் ஏற்றி கால பைரவரை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் குருக்கள் கிருபாகரன் குருக்கள், தமிழக மற்றும் கர்நாடகா மாநில பக்தர்கள் செய்திருந்தனர்.