மயிலம்: மயிலம் தண்டு மாரியம்மன் கோவில் ஆனித் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 9ம் தேதி காப்பு கட்டுதல் நடந்தது. மறுநாள் காலை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் மயிலம் குளக்கரையிலிருந்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் பூங்கரகத்தை கோவில் வளாகத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு பெண்கள் பொங்கலிட்டு படைத் தனர். இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.