குன்றத்தில் தெப்ப உற்ஸவம் ரத்து பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2022 12:02
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் தெப்பத்திருவிழா ரத்து செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வந்து ஏமாற்றமடைந்து குளத்திலுள்ள தண்ணீரை தலையில் தெளித்து தெப்பத்தை வணங்கிச் சென்றனர்.
பிப். 1ல் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வழக்கமாக திருவிழா நாட்களில் தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா அன்று ஜி.எஸ்.டி, ரோட்டிலுள்ள தெப்பக்குள தண்ணீரில் மிதவை தெப்பம் அமைத்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள்வர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க காலையில் மூன்று சுற்றுக்கள், இரவு தெப்பக்குள மைய மண்டபத்தில் ஊஞ்சல் அமைத்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி பக்தி உலாத்துதல் முடிந்து மீண்டும் சுவாமி தெப்பத்தில் எழுந்தருள்வர். இந்த ஆண்டு கொரோனா தடை உத்தரவு சுவாமி வீதிஉலா, தேரோட்டம், தெப்பத்திருவிழா ரத்து செய்யப்பட்டு கோயிலுக்குள் புறப்பாடு செய்யப்பட்டது.
சூரசம்ஹாரம்: திருவிழா முடிந்ததும் சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு போயில் திருவாட்சி மண்டபத்தில் நடைபெற்றது. சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்நருளினர். வீரபாகு தேவர் முன்செல்ல சூரபத்மனை சுப்பிரமணிய சுவாமி விரட்டி சென்று சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. புராண கதையை சிவாச்சாரியார் கூறினார். தீபாராதனைக்கு பின்பு சுவாமி சேர்த்தி சென்றார்.