இளங்காமுடி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2022 01:02
கொட்டாம்பட்டி: கம்பூர் இளங்காமுடி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்
கம்பூரில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி மூன்று நாட்கள் இளங்கா முடி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாளான நேற்று குதிரைப் பொட்டலில் இருந்து புரவிகள் மற்றும் பதுமைகள் நேற்று முத்து பிடாரி அம்மன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு பக்தர்கள் மாவிளக்கு ஏற்றியும் குழந்தை வரம் கிடைக்கப் பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இன்று (பிப்.11) கோயிலில் இருந்து ஒரு கி.மீ.,தொலைவில் உள்ள இளங்கா முடி அய்யனார் கோயிலுக்கு புரவிகள் கொண்டு செல்லப்படுகிறது.வழியில் ஈட்டிக்காரசாமி பக்தர்களுக்கு குறி சொல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூன்றாம் நாள் கருப்பு கோயில் முன் கிராமத்து சார்பில் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். இவ்விழாவில் கம்பூர், தேனங்குடிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.