வில்லியனூர்: பங்கூர் எல்லை முத்துமாரியம்மன் கோவில் புதுப்பிக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. மங்கலம் தொகுதி பங்கூர் கிராமத்தில் உள்ள எல்லை முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. அறங்காவலர் குழுவினர் முன்னிலையில், பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக் கழக சேர்மன் பாலமுருகன் பூமி பூஜை செய்து, திருப்பணியைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஏழுமலை, ஆனந்தசங்கர், திருப்பணி கமிட்டி தலைவர் கணேசன், பொருளாளர் ராமசாமி, உறுப்பினர்கள் வீரராகவன், அர்ச்சுனன், தட்சணாமூர்த்தி, அய்யனார் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.