பதிவு செய்த நாள்
12
பிப்
2022
05:02
அன்னூர்: குருக்களையம்பாளையம், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.ஒட்டர்பாளையம் ஊராட்சி, குருக்களையம்பாளையத்தில், பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது, இங்கு புதிதாக சிற்ப சாஸ்திர முறைப்படி, கருங்கல்லால், மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், கோபுரம் கட்டப்பட்டது.கடந்த 9ம் தேதி விநாயகர் வழிபாடுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 10ம் தேதி காலையில், யாகசாலை பூஜையும், மதியம் விமான கோபுர கலசம் நிறுவுதலும், இரவு 108 வகை மூலிகை பொருட்களை யாககுண்டத்தில் சமர்ப்பித்தலும் நடந்தது. நேற்று காலை 9:45 மணிக்கு விமான கோபுரம், கன்னிமூல கணபதி, மாகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.