பதிவு செய்த நாள்
13
பிப்
2022
10:02
பூரட்டாதி 4ம் பாதம்: நீங்கள் செய்யும் செயல்கள் ஒன்றுக்கு பத்தாக லாபத்தை தரும். சாதனைகள் பல நிகழ்த்தி புகழ் பெறும் யோகம் உண்டாகும். எதிர்பார்ப்பு அனைத்தும் ஒவ்வொன்றாக நடந்தேறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். மருத்துவச் செலவு குறையும். வாழ்க்கைத்துணை வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வு தருவதாக அமையும். சேமிக்கவும் வாய்ப்புண்டு. அரசு, தனியார் துறை பணியாளர்கள் கடந்த காலத்தில் இருந்த பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். பணியிடத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவும். தொழிலதிபர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பெண்களின் கருத்துக்கு குடும்பத்தினர் முக்கியத்துவம் அளிப்பர். கணவரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கலைத்துறை, டெக்னிக்கல் துறையை சார்ந்தவர்கள் மேன்மை அடைவர். அரசியல்வாதிகளுக்கு நீண்டநாள் பிரச்னைகள் தீரும். தலைமையின் ஆதரவாக சிலருக்கு பட்டம், பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் சாதனைகள் புரியலாம். படித்து முடித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: பிப்.20, 21
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 1
பரிகாரம்: அம்மன் கோயிலை காலையில் 3 முறை வலம் வரவும்.
உத்திரட்டாதி: இந்த மாதம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமான பலனைக் கொடுக்கும். வருமானம் பலவழிகளில் வரத் தொடங்கும். பழைய கடன் பிரச்னை மறையும். கடந்த கால உழைப்பின் பயனை பெற்று மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு தேவையான பணவசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திச் சாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடிப்பர். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். மனம் போல ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கலைத்துறையினர் எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்படும். ஒப்பந்தம் கிடைக்க விடாமுயற்சி தேவைப்படும். அரசியல்துறையினர் சாமர்த்தியமாக செயல்பட்டு தலைமையின் ஆதரவை பெறுவர். மாணவர்கள் புத்தி சாதுாரியத்தால் வெற்றி காண்பர். பெற்றோரின் பாராட்டும் கிடைக்கும். சந்திராஷ்டமம்: பிப். 21, 22
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 2
பரிகாரம் :அம்மன், பசு வழிபாடு அல்லல் தீர்க்கும்.
ரேவதி: எந்த இடத்திலும் கவனமாக பேசுவது நல்லது. வாக்குறுதிகளை கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது அவசியம். மனதில் வீண் ஆசைகள் தோன்றலாம். சுபவிஷயங்களில் தடைகள் குறுக்கிட்டாலும் முடிவு நன்மையாக அமையும். விருந்து,விழாக்களில் அடிக்கடி பங்கேற்பீர்கள். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். நீர், தோல் சம்பந்தமான பிரச்னைகளால் சிலர் அவதிப்படலாம். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது வளர்ச்சிக்கு துணைநிற்கும். பணியாளர்கள் மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் அனுசரித்து நடப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் அந்நிய நபர்களின் தலையீட்டை தவிர்க்கவும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்தால் மன அமைதி நிலைக்கும். பெண்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேற கடின உழைப்பும், விடாமுயற்சி தேவைப்படும். குடும்ப நலனுக்காக எதையும் தியாகம் செய்வர். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அவர்களுக்காக கூடுதல் பணம் செலவாகும். கலைத்துறையினர் நிம்மதியுடன் பணியில் ஈடுபடுவர். தொழில்ரீதியாக நீண்ட துார பயணம் செல்ல நேரிடும். மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் ஈடுபடுவர். வீண்பொழுது போக்கில் ஈடுபட வேண்டாம்.
சந்திராஷ்டமம்: பிப். 22, 23
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 3
பரிகாரம்: விநாயகர், தட்சிணாமூர்த்தி வழிபாடு வினை தீர்க்கும்.