அவிட்டம் 3, 4 பாதம்: குடும்பத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு அக்னியைப் போல சுடலாம். ஆனால் வார்த்தைகளில் வழிகாட்டுதல் நிறைந்திருக்கும். பெற்றோரின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கடன் பிரச்னை ஓரளவு தீரும். சுபவிஷயத்தில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு நன்மையாக அமையும். நோய்நொடி தீர்ந்து ஆரோக்கியம் மேம்படும். அரசு ஊழியர்கள் பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகும் நிலை உருவாகும். தனியார் ஊழியர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து போவது பிரச்னையை தவிர்க்க உதவும். பொருளாதாரம் சீராக இருக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரிகள் தொழிலில் மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டு லாபம் அடைவர். பெண்கள் தங்கள் சேமிப்பை குடும்பச் செலவுகளுக்காக பயன்படுத்துவர். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் காண்பர். அரசியல்வாதிகள் புத்துணர்வுடன் செயல்படுவர். மக்கள் மத்தியில் மதிப்பு மரியாதை உயரும். கலைத்துறையினர் சிறந்த சாதனை படைத்து பாராட்டுகளும் விருதுகளும் பெறுவார்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாணவர்கள் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் உதவி புரிவார்கள். சந்திராஷ்டமம்: பிப். 18, 19 அதிர்ஷ்ட நாள்: பிப். 27 பரிகாரம் : குல தெய்வம், முன்னோர், வராகரை வழிபடுங்கள்.
சதயம்: இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல பலன்கள் உண்டாகும். திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். தெய்வ வழிபாடு மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரவு கூடும். வங்கி இருப்பு அதிகரிக்கும். தான, தர்ம சிந்தையுடன் பிறருக்கு உதவுவீர்கள். குடும்பத்தில் சுபசெலவு அதிகரிக்கும். ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். விருந்து, விழாக்களில் அடிக்கடி பங்கேற்பீர்கள். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன் தரும். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து உற்சாகமாக காணப்படுவார்கள். சலுகை, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்கு வாக்கு வன்மையால் காரியங்கள் வெற்றி பெறும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சமையலறைக்கு தேவையான நவீன சாதனங்கள் வாங்குவர். கலைத்துறையினர் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். சக கலைஞர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பெரியோர்களின் பாராட்டு கிடைக்கும். பயனுள்ள பொழுது போக்குகளில் ஈடுபடுவர். சந்திராஷ்டமம்: பிப்.19, 20 அதிர்ஷ்ட நாள்: பிப்.28
பரிகாரம் ரங்கநாதரை வழிபட வெற்றி உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதம் இந்த மாதம் பணவரவு திருப்தி தரும். ஆனால் வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு வேலையையும் செய்யும் முன் அதிலுள்ள நல்லது கெட்டதை ஆராய்ந்து செய்வது நல்லது. மூத்த சகோதரர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு துணை நிற்கும். தொழில், வியாபாரத்தில் விழிப்புடன் செயல்படுவது அவசியம். சுமாரான அளவில் லாபம் கிடைக்கும். திடீர் செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடலாம். உடல்நிலை ஒருநேரம் போல ஒருநேரம் இருக்காது. தொழிலதிபர்கள் தொழிலாளர் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிப்பர். பணியாளர்கள் குறிக்கோளற்ற வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்கள் குடும்பத்தினரின் ஆதரவுடன் நிம்மதியாக இருப்பர். பிள்ளைகளின் வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபடுவர். கலைத்துறையினர் திறமையை வெளிப்படுத்த முயற்சி மேற்கொள்வர். விடா முயற்சியால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவர். அரசியல்வாதிகள் தொண்டர்களின் வகையில் செலவு செய்வர். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். மாணவர்கள் எதிர்கால நலன் கருதி அக்கறையுடன் படிப்பது நல்லது. ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றவும். சந்திராஷ்டமம்: பிப்.20, 21 அதிர்ஷ்ட நாள்: மார்ச் 1
பரிகாரம் : அபிராமி வழிபாடு நலம் தரும்.
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »