Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பட்டினத்தில் உன்மத்த ... மாசி மாத பிறப்பு: பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் கோபூஜை வழிபாடு மாசி மாத பிறப்பு: பிரம்மபுரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகின் மிக உயரமான முருகன் சிலை ஏப்.6ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு
எழுத்தின் அளவு:
உலகின் மிக உயரமான முருகன் சிலை ஏப்.6ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு

பதிவு செய்த நாள்

13 பிப்
2022
10:02

ஆத்துார் : உலகில் மிக உயரமாக 146 அடி உயரத்தில் 3 கோடி ரூபாயில் கட்டப்பட்ட முருகன் சிலைக்கு ஏப்.6ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்துாரைச் சேர்ந்த முத்துநடராஜன் 2015ல் புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே மலேஷியாவில் உள்ள முருகன் சிலையை போன்று அமைக்க முடிவு செய்தார்.ம

லேஷியாவில் சிலை வடிவமைத்த திருவாரூரைச் சேர்ந்த ஸ்தபதி தியாகராஜன் 50, அழைத்து வந்து உலகில் பெரிய முருகன் சிலையை 3 கோடி ரூபாயில் கட்ட முடிவு செய்தார்.தொடர்ந்து 2016 செப்., 6ல் பூமிபூஜை போட்டு பணி துவங்கியது. 2018ல் முத்துநடராஜன் உடல் நலக்குறைவால் இறந்தபோதும் அவரது மகன்கள் ஸ்ரீதர் 50, வசந்தராஜன் 55, ஞானவேல் 52, மகள் பத்மாவதி 50, ஆகியோர் பணியை தொடர்ந்தனர்.

திருப்பணி குழு நிர்வாக இயக்குனர் ஸ்ரீதர் கூறுகையில், 126 அடி உயர முருகன் சிலை, 20 அடி உயர பீடம் என 146 அடி உயரத்தில், ஏழு கோண வடிவமைப்பில் அறுபடை முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது. ஏப்., 6ல் கும்பாபிஷேகம் நடத்தப்படும், என்றார்.ஸ்தபதி தியாகராஜன் கூறுகையில், மலேஷியா முருகன் சிலை வேல் பிடித்தது போல் இருக்கும்; இங்குள்ள சிலை, வலது கையில் ஆசீர்வாதம், இடது கையில் வேல், சிரித்த முகத்துடன் தலையில் மணிமகுடம் சூடி அமைக்கப்பட்டுள்ளது. ஆடை, அணிகலன் அமைத்து, பஞ்சவர்ணத்தில் வண்ணம் தீட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆசிய கண்டத்திலும், உலகளவிலும் பெரிய முருகன் சிலையாக இருக்கும் என்பதால், சுற்றுலா தலமாக இந்த இடம் மாறும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சபரிமலை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாத ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அராளகேசி ரத்னகிரீஸ்வரர் கோவில். இக்கோவில், 1970ல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வெள்ளை விநாயகர் கோவில் ஏகாம்பரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி அடுத்தநாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar