வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோலிவில் முகூர்த்தக்கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2022 06:02
வெள்ளகோவில்: வெள்ளகோவில் பிரசித்தி பெற்ற வீரக்குமார் சுவாமி கோவில் மாசி மகா சிவன் ராத்திரி 139 ஆம் ஆண்டுதேர் திருவிழாவை முன்னிட்டு தேர் முகூர்த்தக்கால் நடும் விழா நாளை காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறுவதற்காக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் பிப்ரவரி 14ம் தேதி நாளை காலை 9 மணியளவில் தேர் முகூர்த்தகால், போடப்பட்டு பூஜை செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி வாட்ஸ் அப்பில் வைரலாகி உள்ளது. பிப் 14 ம் தேதி 9 மணிக்கு மேல் தேர் முகூர்த்தக்கால், 23 ம் தேதி காலை 9 மணிக்கு மேல் தேர் கலசம் வைத்தல், மார்ச் 1 ம் தேதி செவ்வாய் கிழமை 10 மணிக்கு மேல் 12 மணிகள் அவிட்ட நட்சத்திரத்தில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளச் செய்தல். மாலை 4.30 மணி அளவில் பழைய பூஜை, இரவு 7 மணிக்கு தேர் நிலை பெயர்தல்., மார்ச் 2-ஆம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேரோட்டம், மார்ச் 3ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேர் நிலை சேர்தல் நடக்கிறது என வாட்ஸ் அப்பில் வலம் வந்தது. இதுகுறித்து கேட்டபோது :தேரோட்டத்துக்கான அனுமதிக்கு மாவட்ட கலெக்டரிடம் கோரப்பட்டுள்ளது. நாளை நல்ல நாள் எனவே தேர் முகூர்த்தக்கால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நாளை காலை தேர் முகூர்த்தகால் 9 மணியளவில் போடப்படும் என வீரக்குமார் கோவில் அலுவலர் தெரிவித்தார்.