பதிவு செய்த நாள்
14
பிப்
2022
10:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாசி மாத பவுர்ணமி திதி வரும், 15ல், இரவு, 10:30 மணி முதல், 16ல், இரவு, 11:30 மணி வரை உள்ளது. எனவே, இந்த நேரத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்திட, கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலைக்கு வரவேண்டாம். இதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.