திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் நடந்த தசாவதார நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இக்கோயிலில் ஜன.27 ம் தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் விழா துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு 7:50 மணிக்கு துவங்கி நள்ளிரவு 1:25 மணி வரை தசாவதாரம் நடந்தது. இதில் அம்மன் காளி, மச்ச, கூர்ம, கிருஷ்ணர், ராமர், காளிங்கநர்த்தனம், மோகினி அவதாரங்களில் காட்சியளித்தார்.முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. விடிய, விடிய நடந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டுதல், மாலையில் கொடியிறக்கம் நடந்தது. இன்று (பிப்.14) ஊஞ்சல் உற்ஸவம், நாளை (பிப்.15) மாலை 6:00 மணிக்கு தெப்ப உற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது.