பதிவு செய்த நாள்
14
பிப்
2022
10:02
நாமக்கல்: மாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. நாமக்கல்லில், 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆஞ்சநேயர் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ், தெலுங்கு வருட பிறப்புகள், தமிழ் மாத முதல் ஞாயிறு உள்ளிட்ட தினங்களில் வெளி மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க வருகின்றனர். அதில், தமிழ் மாதத்தின் மாசி முதல் ஞாயிற்றுக்கிழமையன நேற்று சுவாமிக்கு, காலை, 10:00 மணிக்கு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சிறப்பு வெண்பட்டு அலங்காரமும், தீபாராதனையும் காட்டப்பட்டது. சுவாமிக்கு நேற்று மாலை, குளிர் காலத்தின் கடைசி வெண்ணை காப்பு அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.