திருக்கோவிலூர் தீர்த்த குளத்தில் இன்று தெப்ப உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2022 03:02
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மாசிமக உற்சவத்தை முன்னிட்டு பெருமாள் தீர்த்த குளத்தில் தெப்பல் உற்சவம் நடக்கிறது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மாசி மகோற்சவத்தை முன்னிட்டு இன்று காலை 10:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள், சக்கரத்தாழ்வார்க்கு கோவில் வளாகத்தில் அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து 11:00 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு வசந்த மண்டபத்தில் தீர்த்தவாரி திருக்குளத்தில் தீர்த்தவாரி வைபவம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளுசபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வசந்தமண்டபத்தின் வழியே எழுந்தருளி, தீர்த்த குளத்தில் தெப்பத்தில் உலாவரும் உற்சவம் நடக்கிறது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில் விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.