சுப்பிரமணிய பட்டர் என்னும் சக்தி உபாசகர் திருக்கடையூர் அபிராமி கோயிலில் தைஅமாவாசையன்று தியானத்தில் இருந்தார். அங்கு வந்த சரபோஜி மன்னர், ‘‘இன்று திதி என்ன’’ என்று கேட்க தன்னை மறந்த நிலையில் ‘பவுர்ணமி’ என பதிலளித்தார் பட்டர். இதனால் தண்டனைக்கு ஆளானார். அம்மன் மீது அபிராமி அந்தாதி பாடலைப் பாட அமாவாசையான அன்றிரவு நிலவு தோன்றியது. இந்த பாடலை பாடினால் நல்லது நடக்கும்.