Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று தேய்பிறை பஞ்சமி; தடைகள் நீங்கி ... மலை அடிவாரத்தில் அழகிய விநாயகர் கோவில் மலை அடிவாரத்தில் அழகிய விநாயகர் ...
முதல் பக்கம் » துளிகள்
90 நாட்களில் வேண்டுதலை நிறைவேற்றும் முக்தி நாக சுப்ரமண்யர்
எழுத்தின் அளவு:
90 நாட்களில் வேண்டுதலை நிறைவேற்றும் முக்தி நாக சுப்ரமண்யர்

பதிவு செய்த நாள்

13 ஜன
2026
01:01

பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, பல்வேறு சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி, பக்தர்களை தன் வசம் ஈர்க்கும் புராதன கோவில்களும் உள்ளன. அவற்றில் ஒன்று முக்தி நாக சுப்ரமண்யர் கோவில். பெங்களூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்கள் ஏராளமாக இருந்தாலும், ராமோஹள்ளியில் உள்ள முக்தி நாக சுப்ரமண்யர் கோவில் மிகவும் அற்புதமானது. இங்கு குடிகொண்டுள்ள சுப்ரமண்யர், நாகர் வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.


ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிலையை தரிசிக்கலாம். ஏழு தலைகள் கொண்ட சிலை, 16 அடி உயரம், 36 டன் எடை கொண்டதாகும். இக்கோவில், 200 ஆண்டுகள் பழமையானது. முக்தி நாக சுப்ரமணயர் கோவிலுக்கு வந்து, பக்தர்கள் மனமுருகி தங்களின் வேண்டுதலை முன்வைத்தால், அது, 90 நாட்களில் நிறைவேறும் என்பது ஐதீகம். தங்களின் விருப்பங்கள் நிறைவேற, இங்குள்ள புற்றை ஒன்பது முறை வலம் வரவும் வேண்டும். பக்தர்கள் முதலில் புற்றை வலம் வந்த பின், காரிய சித்தி விநாயகர் சன்னதிக்கு செல்கின்றனர்.


அதன்பின், முக்த நாகரை தரிசனம் செய்து பிரார்த்திக்க வேண்டும். இக்கோவிலில் பல கடவுள்கள் குடி கொண்டுள்ளனர். கேட்ட வரங்களை அள்ளித்தரும், நினைத்த காரியம் நிறைவேற வைக்கும் காரிய சித்தி விநாயகரை இங்கு தரிசிக்கலாம். இது முருகக்கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கோவிலாகும். காரிய சத்தி விநாயகரின் இடது புறத்தில் பிரம்மாண்டமான சுப்ரமண்யர் சிலை. இது ஒரே கல்லால் செதுக்கப்பட்ட சிலையாகும். இந்த விக்ரகம் 21 அடி உயரம், 56 டன் எடை உள்ளது.


கிரக தோஷம், நாக தோஷம் உள்ளவர்கள், குடும்ப பிரச்னைகளால் அவதிப்படுவோர், திருமண தடை உள்ளவர்கள், முக்தி நாக சுப்ரமண்யர் கோவிலுக்கு வந்து நிவர்த்தி பூஜை செய்தால், அனைத்து பிரச்னைகளும் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் என்பது ஐதீகம். எனவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து பரிகார பூஜை செய்கின்றனர். செவ்வாய்கிழமைகள், சஷ்டி நாட்களில் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர்.


எப்படி செல்வது


பெங்களூரு கெங்கேரியின், ராமோஹள்ளியில் தொட்ட ஆலமரத சாலையில், முக்தி நாக சுப்ரமண்யர் கோவில் அமைந்துள்ளது. பெங்களூரு நகரில் இருந்து, 18 கி.மீ., தொலைவில் கோவில் உள்ளது. பெங்களூரின் அனைத்து இடங்களில் இருந்தும், கெங்கேரிக்கு பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயில்களும் கெங்கேரியில் நின்று செல்கின்றன. தனியார் வாகனம், ஆட்டோ வசதியும் உள்ளது. கெங்கேரியில் இறங்கி, அங்கிருந்து, ஆட்டோ அல்லது வாடகைக்காரில் கோவிலுக்கு செல்லலாம்.


தரிசன நேரம்: காலை 7:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை.


தொடர்பு எண்: 080 2671 3583

 
மேலும் துளிகள் »
temple news
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியின் பூஞ்சா கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பஞ்ச துர்கா பரமேஸ்வரி கோவில். ... மேலும்
 
temple news
சிக்கபல்லாபூரில் இருந்து நான்கு கி.மீ., துாரத்தில் உள்ளது திப்பேனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில், ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வருவதாலும், எங்கு பார்த்தாலும் இயற்கை எழில் கொஞ்சுவதாலும் ... மேலும்
 
temple news
‌அமாவாசை, பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாம் திதி பஞ்சமி ஆகும். இது வாராகி அம்மனை வழிபட மிகவும் உகந்த நாள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar