Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூங்கில் கூடை போன்று அமைக்கப்பட்ட ...
முதல் பக்கம் » துளிகள்
ஆண்டுகளுக்கு முந்தைய துர்கை அம்மன்
எழுத்தின் அளவு:
ஆண்டுகளுக்கு முந்தைய துர்கை அம்மன்

பதிவு செய்த நாள்

13 ஜன
2026
01:01

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியின் பூஞ்சா கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பஞ்ச துர்கா பரமேஸ்வரி கோவில். இக்கோவில் உள்ள பகுதி, ஒரு காலத்தில் அடர்ந்த வனமாக இருந்தது. இங்கு துறவிகளும், ரிஷிகளும் தவம் செய்தனர். இக்கோவில், 800 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.


பஞ்ச துர்கா பரமேஸ்வரி கோவில் என்பது துர்கா தேவியின் ஷைலபுத்ரி, பிரம்மச்சாரிணி, சந்திரகாந்தா, கூஷ்மந்தா, ஸ்கந்தமாதா ஆகிய பஞ்ச வடிவங்களை குறிக்கிறது. கருவறையில் துர்கையின் வடிவத்தை பார்த்தால் மெய்சிலிர்க்கிறது. புராண கதைகளை சித்தரிக்கும் வகையில், சிற்பங்கள் ராஜகோபுரத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.


துர்கா தேவி கருவறையை சுற்றி விசாலமான பிரகாரம் அமைந்து உள்ளது. கோவிலில் பெரிய முற்றம், துாண்கள் கொண்ட மண்டபங்கள், தெப்பகுளம் அமைந்து உள்ளது.


கோவிலுக்குள் துர்கா பரமேஸ்வரி தேவி மூலவர், கல்லால் செய்யப்பட்டு உள்ளது. கோவில் வளாகத்தில் ஹனுமன் உட்பட மற்ற தெய்வங்களின் சன்னிதிகளும் உள்ளன. அம்மனை தரிசிக்க, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.


எப்படி செல்வது?


பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து, 48 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.

ரயிலில் செல்வோர், பன்ட்வால் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து, 21 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு ஆட்டோ, டாக்சியில் செல்லலாம்.

பஸ்சில் செல்வோர், வேனுார் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு டாக்சியில் செல்லலாம்.

கோவில் திறப்பு: காலை 6:30 முதல் மதியம் 12:00 மணி வரை மற்றும் மாலை 5:30 முதல் இரவு 7:00 மணி வரை.

திருவிழா: நவராத்திரி, தேர் மஹோத்சவம்

அழைப்புக்கு: 97419 69279

 
மேலும் துளிகள் »
temple news
சிக்கபல்லாபூரில் இருந்து நான்கு கி.மீ., துாரத்தில் உள்ளது திப்பேனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில், ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வருவதாலும், எங்கு பார்த்தாலும் இயற்கை எழில் கொஞ்சுவதாலும் ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
‌அமாவாசை, பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாம் திதி பஞ்சமி ஆகும். இது வாராகி அம்மனை வழிபட மிகவும் உகந்த நாள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar