சென்னை: சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு, சர்வ அலங்காரத்தில் உற்சவர் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், வடபழநி ஆண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து, கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. தற்போது, 48 நாள் மண்டலாபிஷேக பூஜை நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு பிறகு, வியாழக்கிழமை மாசி மக புறப்பாடு, தீர்த்தவாரியும், சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. மாசி மகத்தை முன்னிட்டு, தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும், இரவு 9:௦௦ மணிக்கு சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் உற்சவர் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.