பழநி: பழநியில் விடுமுறை நாளை முன்னிட்டு கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்தனர்.
பழநி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் கூட்டம் இருந்தது. கிரிவீதி, சன்னதி வீதி, குளத்துரோடு பகுதிகளில் காலை நேரத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டது. வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். நீண்ட வரிசையில் வின்ச், ரோப் கார் ஸ்டேசனில் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். குடமுழுக்கு மண்டபம் வழியே படிப்பதை வழியே பக்தர்கள் மலை மீது சென்று பழநி ஆண்டவரை தரிசித்தனர்.