மூணாறு: கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட பாதயாத்திரை இயல்பு நிலைக்கு திரும்பியது.
மூணாறில் இருந்து 90க்கும் மேற்பட்ட குழுக்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதயாத்திரை பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதால் பாத யாத்திரை குழுக்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் 10 க்கும் மேற்பட்ட குழுக்கள் சென்றதால் பாதயாத்திரை இயல்பு நிலைக்கு திரும்பியது.