பதிவு செய்த நாள்
21
பிப்
2022
10:02
மாமல்லபுரம் : கடலுார் அக்னீஸ்வரர் கோவிலில், மஹா கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடந்தது.செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் அடுத்த கடலுார் பகுதியில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், பல நுாற்றாண்டுகள் பழமையான, சொக்கநாயகி உடனுறை அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
சிலை பிரதிஷ்டைகோவில் அறங்காவலராக சூணாம்பேடு ஜமீன்தார் பரம்பரையினர் நிர்வகித்து வருகின்றனர். இக்கோவில் நீண்டகாலம் பராமரிப்பின்றி, உருக்குலைந்து சீரழிந்து, வழிபாடும் தடைபட்டது. இது குறித்து, நம் நாளிதழில், செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, அறங்காவலர், புனரமைப்பு பணிகளை துவக்கி, மூன்றாண்டுகளுக்கு முன், 80 சதவீத பணிகளை முடித்தனர்.இறுதிகட்ட பணிகள் முடிக்கப்படாமல், கும்பாபிஷேகம் தாமதமானது. இந்நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடானது. பழமையான சொக்கநாயகி மூலவர் கற்சிலையை, பிரதிஷ்டைக்காக கையாண்டபோது, அதன் கால்கள் பகுதி, இரண்டு துண்டுகளாக உடைந்தது. அறநிலையத் துறையினர் ஆய்வைத் தொடர்ந்து, தற்போது புதிய கற்சிலை செய்து, பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.மஹா தீபாராதனைகடந்த 18ம் தேதி, கோ பூஜை, கணபதி ஹோமம், முதல்கால யாக பூஜை என துவக்கி, நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை உள்ளிட்டவற்றை முடிந்தது. அதைத் தொடர்ந்து, அக்னீஸ்வரர், சொக்கநாயகி உள்ளிட்ட சன்னிதிகள் விமானங்களுக்கு, புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, விநாயகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள், சுவாமி, அம்பாள் மூலவர் ஆலய கும்பாபிஷேகம் நடத்தி, மஹா தீபாராதனை நடந்தது. அறங்காவலர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.