கமுதி: கமுதி அருகே மண்டலமாணிக்கம் கைலாசநாதர் திருக்கோயிலில் திருப்பணி முழுமைபெற்று விரைவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற வேண்டியும், உலக அமைதிகாகவும் 108 மூலிகை சிறப்புபூஜை நடந்தது.கணபதி ஹோமம் தொடங்கி யாகசாலை பூஜை, கோபூஜை நடந்தது.பின்பு சிவபெருமானுக்கு பன்னீர்,திரவியப்பொடி உட்பட 108 வகையான மூலிகை பொடிகள் அபிஷேகம்,சிறப்புபூஜை நடந்தது.மூலவருக்கு மலர் அலங்காரம், தீபாராதனை நடந்தது.பூஜையில் சிவனடியார்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.