* பிறர் செய்த உதவியை மறக்காத மனம் இருந்தால் போதும். உங்கள் வாழ்க்கை ஒளிரும். * ஏழை மீது இரக்கம் காட்டுபவன் ஆண்டவருக்கே கடன் கொடுக்கிறான். * வாழ்க்கைத்துணையிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். * உங்களிடம் கடன் கேட்பவருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். * வெறும் வாய்ப்பேச்சால் எவ்வித பலனும் கிடைக்காது. * பிரச்னையில் இருந்து விலகி இருங்கள். அதுவே மேன்மை அளிக்கும். * மனதை திடமாக வைத்திருங்கள். அப்போதுதான் தைரியமாக எதிலும் ஈடுபட முடியும். – பொன்மொழிகள்