விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக விடையாற்றி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2022 11:02
விருத்தாசலம் : விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக விடையாற்றி உற்சவத்தில், காய்கனி அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் அருள்பாலித்தனர்.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம் நிறைவு பெற்று, விடையாற்றி உற்சவம் நடந்து வருகிறது. ஆறாம் நாள் உற்சவத்தையொட்டி, நேற்று மாலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.இரவு 7:30 மணியளவில், பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய காய்கனி அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் அருள்பாலித்தனர். விழாவில், நாத சங்கமம் இசை நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் குமாரதேவ மட 24வது குருமகா சந்நிதானம் ரத்னவேலாயுத சுவாமிகள் தரிசனம் செய்தார்.