காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவிலில் பல்வேறு மாநில பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி விழா துவக்கியது.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனிஸ்வரபகவான் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் வருடத்தோறும் நடைபெறும்.இந்தாண்டு நாட்டியாஞ்சலி 17ம் ஆண்டு துவக்க விழா 5நாட்கள் நடைபெறுகிறது.நேற்று முன்தினம் முதல் நாள் விழாவை துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ் குத்துவிளக்கு ஏற்றிவைத்து நாட்டியாஞ்சலியை துவக்கி வைத்தார். கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் முன்னிலை வகித்தார். முதல் நாள் நாட்டியாஞ்சலியில் காரை சித்ரா கோபிநாத்,பாண்டி ஜெயஸ்ரீ நாராயணன்,சென்னை சஹானா,மதுரை சீதாலஷ்மி ஸ்ரீனிவாசன்,திண்டிவனம் ஸ்ரீவிஜயன் ஆகியடை நடைபெற்றது.மகா சிவராத்திரியை முன்னிட்டு சென்னை,திருச்சி,மைசூர்,பெங்களூர் ஹைதராபத் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்திலிருந்து பரதநாட்டிய குழுவினர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.