வடபழநி ஆண்டவர் கோயிலில் களைகட்டிய மகா சிவராத்திரி: விடிய விடிய நடைபெற்ற பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2022 07:03
சென்னை: வடபழநி ஆண்டவர் கோயிலில் மகா சிவராத்திரி கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது. விடிய விடிய சிவன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர், வந்திருந்த பக்தர்களுக்கு ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
நாதஸ்வர இசையுடன் துவங்கிய மகா சிவராத்திரி விழாவில் கோவில் ஓதுவார்களின் திருமறை இசை,நாகை முகுந்தனின் சிவ மகிமை சொற்பொழிவு,அபிேஷக் ராஜூ மற்றும் லஷ்மன் ஸ்ருதி குழுவினரின் பக்தி பாடல்கள் ,சரஸ்வதி பரதநாட்டிய வித்யாலயாவின் சிவசக்தி தாண்டவம் நாட்டியம்,யு.ராஜேஷின் மாண்டலின் இசைக்கச்சேரி,வேங்கீஸ்வரர் குழுவினரின் சிவ கயிலாய வாத்திய நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. சிவன் சன்னதியில் விடியும் வரை சிறப்பு அலங்காரம் அபிேஷகம் ஆகியவை நடைபெற்றது பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர், அனைவரும் பூஜையை காண்பதற்கு வசதியாக பெரிய மேடை போட்டப்பட்டிருந்தது.
கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ருத்ராட்சம்,முருகன் படம்,தலவரலாறு புத்தகம் உள்ளீட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது மேலும் முதல் நாள் இரவில் ஆரம்பித்து மறுநாள் காலை வரை பக்தர்களுக்கு வெண் பொங்கல்,சர்க்கரை பொங்கல்,சுண்டல்,பழம்,பால் ஆகியவை வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் தலைமையிலான கோவில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.