பதிவு செய்த நாள்
03
மார்
2022
11:03
செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடந்தது.
செஞ்சி பகுதிசிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடந்தது. பீரங்கிமேடு அபிதகுஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாலை 6 மணிக்கும், இரவு 9 மணி, 12 மணி, அதிகாலை 3 மணிக்கும் சிறப்ப அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது. இரவு 12 மணிக்கு லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் செய்தனர். சிறுகடம்பூர் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் 18 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நடந்தது. இதை முன்னிட்டு மாலை 6 மணி, இரவு 10 மணி, 12 மணி, அதிகாலை 2 மணி, 4 மணி மற்றும் 5 மணிக்கு என ஆறு கால விசேஷ அபிஷகமும். சிறப்பு பூஜையும் நடந்தது. செஞ்சி மற்றும் சென்னை பரதநாட்டிய குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேல்மலையனுார் அடுத்த தேவனுார் கமலேஸ்வரி அம்பாள் உடனுறை திருநாகீசுவரமுடைய நாயனார் கோவிலில் 1ம் தேதி காலை 7.30 மணிக்கு கணபதி ஹோமமும், 2.30 பொங்கல் வைத்து வழிபாடும், 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 5.30 மணிக்கு சிவபுராணம் நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 7 மணிக்கு முதல்கால பூஜையும், 10 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், 12.30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 5 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.