மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2022 10:03
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ளது புகழ்பெற்ற மணபுள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லாம் ஆண்டும் மாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நேற்று கோவில் நடைதிறப்புடன் துவங்கியது.
காலை 7 மணிக்க பரிவாரபூஜை, 8.30 மணிக்கு செண்டைமேள முழங்க யானைகளின் அணிவகுப்பு. 11 மணிக்கு மேற்கு யாக்கரை ஸ்ரீமூலஸ்தானத்திலிருந்து வாளும் பீடவும் கோவில் சன்னிதிக்கு எழுந்தரளும் நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து 12 மணியளவில் அம்மனுக்கு பூர்ணசாந்தபிஷேகவும் நடந்தன. மாலை 3.30 மணிக்கு அம்மன் சிறக்கல் காளிதாசன் என்ற யானை மீது வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து 5 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க யானைகளின் ஐந்து யானைகளின் அணிவகுப்பில் முத்து குடை மாற்றும் நிகழ்ச்சி நடந்தன. கொரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பொதுவாக அணிவகுப்பில் 15 யானைகள் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சியில் இம்முறை ஐந்து யானைகள் மட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று காலை கோவில் சன்னிதியில் இருந்து வாளும் பீடவும் மேற்கு யாக்கரை மேற்கு யாக்கரை ஸ்ரீமூலஸ்தானத்திற்கு திரும்பி செல்வதோட விழா நிறைவடைந்தன.