பதிவு செய்த நாள்
07
மார்
2022
04:03
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், வெயிலில் பக்தர்கள் சிரமமின்றி நடந்து செல்ல, கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசை, விசேஷ தினங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இது தவிர, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.இந்நிலையில், கோவில் வளாகத்தில், கோடை காலத்தில் பக்தர்கள் நடந்து செல்வது சிரமமாக உள்ளது. கடந்தாண்டு, வெயிலால் சூடு படாத வகையில் நடப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்தனர். நடப்பாண்டும் அதே போன்ற ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.கோவில் வளாகத்தில், ஹீட் ரிப்ளக்டிவ் பெயின்ட் என்கிற, சூடு பரவாத பிரத்யேக வெள்ளை நிற வர்ணம் பூசி வருகின்றனர். மேலும், தரை விரிப்புகள் அமைத்துள்ளனர். கோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள, தினமும், பக்தர்களுக்கு எலுமிச்சை ஜூஸ், நீர் மோர் வழங்கி வருகின்றனர்.