திருப்பாச்சேத்தி: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள வேம்பத்துார் ஆவுடைநாயகி அம்பிகா கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.இந்த கோயிலுக்கு 76 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிலையில் திருப்பணிகள் செய்யப்பட்டன. மார்ச் 4ல் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.காலை 7:00 மணிக்கு புனித நீர் கலசங்களை சுமந்து சிவாச்சாரியார்கள் யாகசாலையை வலம் வந்தனர். காலை 7:50 மணிக்கு வாத்தியங்கள் முழங்க கைலாசநாதர் கோயில் மூலவர் கும்பத்திற்கும் ஆவுடைய நாயகி அம்மன் பரிவார தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கைலாச நாதருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.